search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு முடிவுகள்"

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. #ICSEResult #ISCResult #CISCE
    புதுடெல்லி:

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 28 வரை நடைபெற்றது. ஐஎஸ்சி (12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. https://www.cisce.org என்ற சிஐஎஸ்சிஇ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் குறியீட்டு எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

    10ம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வில் மும்பையைச் சேர்ந்த ஜுகி ரூபேஷ் கஜாரியா, முக்த்சாரைச் சேர்ந்த மன்ஹர் பன்சால் ஆகியோர் 99.60 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். 12ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களுடன் கொல்கத்தாவின் தேவாங் குமார் அகர்வால், பெங்களூருவின் விபா சுவாமிநாதன் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ICSEResult #ISCResult #CISCE
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #Plus2Result #Plus2Exam #TNResults
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. எனவே, விரைவாக வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாரானது.



    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதுதவிர தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். #Plus2Result #Plus2Exam #TNResults
    ×